இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

சரியாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு சூப்பர் ஹிட் வெற்றிக்காக தொடர்ந்து போராடி வருகிறார் மலையாள நடிகர் திலீப். இந்த வருடம் அவரது நடிப்பில் குடும்பப்பாங்கான திரைப்படமாக வெளியான 'பிரின்ஸ் அன்ட் பேமிலி' திரைப்படம் கூட டீசன்டான வரவேற்பை பெற்றாலும் வசூலில் பெரிதாக சோபிக்கவில்லை.
இந்த நிலையில் அவர் அதிகம் எதிர்பார்த்து வருவது தற்போது நடித்துவரும் 'ப ப ப' படத்தை தான். அறிமுக இயக்குனர் தனஞ்செய் சங்கர் இந்த படத்தை இயக்கி உள்ளார். சமீபத்தில் சூப்பர்ஹிட்டான 'லோகா' படத்தின் மூலம் மலையாளத்தில் பிரபலமான நடன இயக்குனர் சாண்டியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அது மட்டுமல்ல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். நட்சத்திர சகோதரர்களான வினித் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன் இருவருமே இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்கள் போதாது என்று ஒரு முக்கியமான சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் மோகன்லால் திலீப்பின் நட்புக்காக இதில் நடித்துள்ளார்.
அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான 'ஒரு அடார் லவ்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த நூரின் ஷெரீப் என்பவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து இந்த படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளார் என்பது மிக முக்கியமான விஷயம். நீண்ட நாட்களாகவே தயாரிப்பில் இருந்து வந்த இந்த படம் ஒரு வழியாக அனைத்து வேலைகளும் முடிவடைந்து வரும் டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கமர்சியல் அம்சங்களுடனும் இந்த 'ப ப ப' படம் உருவாகியுள்ளதால் நிச்சயம் இந்த படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் நடிகர் திலீப்.




