இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

கன்னடத்தில் உருவாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 2022ல் வெளியான ‛காந்தாரா'. ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்தார். கதாநாயகியாக சப்தமி கவுடா நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1' உருவாகி வருகிறது. அதாவது காந்தாரா படத்தின் முந்தைய கதைகளத்தில் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று(ஜூலை 7) ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தாரா சாப்டர் 1 இவ்வருட அக்டோபர் 2ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். ஏற்கனவே தமிழில் அக்டோபர் 1ம் தேதியன்று தனுஷின் இட்லி கடை படம் திரைக்கு வருகிறது என அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




