ராஜினாமா செய்த திரிஷ்யம் நடிகை பகிரங்க குற்றச்சாட்டு ; நடிகர் சங்கத்திற்குள் சலசலப்பு | முதல்வர் நடிப்புக்கு முழுக்கு... முன்னாள் துணை முதல்வர் ரீ என்ட்ரியா? | தவறுதலாக கிரிக்கெட்டை கால்பந்தாக மாற்றிய ராம்சரண் ; கிரிக்கெட் வீரர் பும்ராவிடம் மன்னிப்பு கேட்டார் | ஐமேக்ஸில் ஜெயிலர் 2 | ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி' வெளியீடு | ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்' | 'பெத்தி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...? | 19 ஆண்டுகளுக்கு பின் ஜீவா, அஞ்சலி கூட்டணி | கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை |

விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் மற்றும் பலர் நடித்து சுந்தர் சி இயக்கிய திரைப்படம் மத கஜ ராஜா. இந்த திரைப்படம் பல காரணங்களால் பல வருடங்களாக கிடப்பில் கிடந்தது. இந்த படத்தை மறுபடியும் தூசி தட்டி இந்த பொங்கலுக்கு திரையிட்டனர். திரையிட்ட எல்லா இடங்களிலும் நல்ல வசூலை பெற்றது. ஆனால் மூன்று மாதங்கள் கடந்தும் இந்த திரைப்படம் எந்த ஒரு ஓடிடி தளத்திலும் இதுவரை ஒளிபரப்பாகவில்லை.
நாம் விசாரித்த தகவலின் அடிப்படையில் இந்த திரைப்படம் காலம் கடந்து வெளியானதால் ஓடிடி உரிமையில் பல சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். கூடிய விரைவில் இதெல்லாம் சரியாகி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகள் முழு மூச்சாக நடப்பதாக சொல்கிறார்கள்.




