தவறுதலாக கிரிக்கெட்டை கால்பந்தாக மாற்றிய ராம்சரண் ; கிரிக்கெட் வீரர் பும்ராவிடம் மன்னிப்பு கேட்டார் | ஐமேக்ஸில் ஜெயிலர் 2 | ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி' வெளியீடு | ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்' | 'பெத்தி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...? | 19 ஆண்டுகளுக்கு பின் ஜீவா, அஞ்சலி கூட்டணி | கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை | ‛கருப்பு 300' கோடி வசூலிக்குமா?, மூக்குத்தி அம்மன் 3 உருவாகுமா? | கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார்' ரிலீஸ் தேதி மாற்றம் |

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தில் இரண்டாம் பாகம் ‛புஷ்பா-2 ; தி ரூல்ஸ்' என்கிற பெயரில் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாகம் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீப நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சென்னை, கொச்சி, மும்பை என மாறி மாறி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ‛புஷ்பா' படத்திற்காக ராஷ்மிகா, ரூ.2 கோடி சம்பளம் வாங்கியதாகவும், 2ம் பாகத்திற்கு ரூ.10 கோடி வாங்கியதாகவும் தகவல் பரவியது. இது குறித்து ஹைதராபாத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, ‛‛எனது சம்பளம் பற்றி வரும் தகவல்களில் உண்மையில்லை. அது வதந்திதான். படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இயக்குநர் சுகுமார் இருப்பதால், புரமோஷன்களில் அவர் கலந்துகொள்ளவில்லை. 'புஷ்பா' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தில் எனக்கு விருது கிடைக்குமா? என்று கேட்கிறீர்கள். கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.




