ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? |

குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் அறிமுகமான இவர் தனது தாய்மொழியை ஒதுக்கிவிட்டு மற்ற மொழிகளில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் என்றும் கன்னட திரையுலகை மதிப்பதில்லை என்றும் இவர் மீது குற்றச்சாட்டு உண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காந்தாரா திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்று இவர் கூறியது கன்னட திரையுலகில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ராஷ்மிகாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் ரிஷப் செட்டி இயக்கி நடித்த படம் தான் காந்தாரா. தனது குருநாதர் என்கிற முறையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்காததும் படத்தை இன்னும் பார்க்கவில்லை என அவர் கூறியதும் கன்னட திரையுலகில் இனி அவர் நடிப்பதற்கு மறைமுக தடைவிதிக்கும் அளவிற்கு நிலைமை சீரியசானது. இந்த நிலையில் நடிகர் கிச்சா சுதீப்பிடம் ராஷ்மிகாவின் இந்த போக்கு பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சுதீப், “இதுபோன்ற விஷயங்களை கவனமாக எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.. நாம் என்ன பேசுகிறோம், கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்ல போகிறோம் என்பது குறித்து கொஞ்சம் பாலீஸாக பேச பழக வேண்டும். பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் பத்து மில்லியன் பேர் பின் தொடர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் நெகட்டிவாக எதுவும் வரக்கூடாது என்று நினைக்கிறோம். நீங்கள் ஒருமுறை பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டாலே உங்கள் மீது பூ மாலைகளும் விழும்.. முட்டை, தக்காளி, கற்களும் விழும்.. மீடியாவின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் சரியாக பேச கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.