Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் படமே என் கடைசி படம்: உதயநிதி

11 நவ, 2022 - 12:55 IST
எழுத்தின் அளவு:
Udhayanidhi-Stalin's-Exclusive-Interview

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‛கலகத்தலைவன்' படம் வரும் நவ.,18ல் வெளியாகிறது. படம் பற்றியும், அரசியல் குறித்தும் உதயநிதி அளித்த சிறப்பு பேட்டி:
கலகத் தலைவன் பட தலைப்பு ஏன்? உங்க ரோல் என்ன?
இது அரசியல் படம் இல்லை என்று சொல்லலாம்.. திரு என்ற கேரக்டர், மென்பொருள் துறையில் வேலை செய்கிறேன்.

கலகத் தலைவன் படம் எதை வைத்து ஒத்துக் கொண்டீர்கள்?
அதுவே பெரிய கதை, அருண் விஜய் நடித்த தடம் கதை எழுதி முடிச்சு, அந்த கதை என்கிட்ட தான் முதல்ல சொன்னாரு. தயாரிப்பாளர் கிட்ட கதை சொல்லும்போது தயாரிப்பாளர் தடம் கதை தவிர இன்னொரு கதையை வந்து செலக்ட் பண்ணாரு. ஒன்றரை வருடம் எனக்கு காத்திருந்தார். இந்த தடம் கதை நான் பண்ண முடியாம போயிடுச்சு. படம் ரிசல்ட் பார்த்து அய்யோ மிஸ் பன்ணிட்டேன்னு வருத்தப்பட்டென். அப்போ மகிழ் திருமேனி கிட்ட ‛கண்டிப்பா நம்ம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்' என்று அப்ப வாக்கு கொடுத்திருந்தேன். இப்போதான் நடந்தது.

அப்போ தலைப்பு வைக்கல.. படம் ஷூட்டிங் போறப்பதான் அப்பாகிட்ட அனுமதி வாங்கி இந்த தலைப்பு வைத்தோம்.. அவரிடம் வேலை பார்க்க ஆசை பட்டேன். சந்தோசம். நெஞ்சுக்கு நீதி படம் முன்னாடி நான் நடிக்க வேண்டியது. காமெடி எல்லாம் வேண்டாங்க ஒரு சீரியஸான படம் பண்ணனும் அப்படின்னு தான் நெஞ்சுக்கு நீதி படம் தேர்ந்தெடுத்து நடிச்சேன். கடைசியாக இருக்கணும் என்று மாமன்னன் படம் கதை முடிவு பண்ணேன். கமல் தயாரிக்கும் படமும் பண்றேன்

தொடர்ந்து கதை கேக்குறீங்களா?
கமல் சார் தயாரிக்கும் படத்தோட கதை இன்னும் நான் கேட்க வேண்டி இருக்கு. அதோட சினிமா கேரியர் முடிச்சிருவேன்னு நினைக்கிறேன்.

அரசியல், சினிமா எப்படி இரண்டையும் பார்த்தீங்க?
படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சொல்றத கேக்கணும்.. கதையில் கவனம் செலுத்தணும்.. அங்கே எதையும் எடுத்து போக மாட்டேன். ஷூட்டிங் முடித்த பிறகு தொகுதி மற்றும் அரசியல் வேலைகளில் கவனம் செலுத்துவேன். ரெண்டையும் பேலன்ஸ் பண்றேன்.. ஆனா அரசியல் முழு நேர வேலை பார்கணும்.. இங்கேயும் அங்கேயும் பயணிக்க முடியாது. கலக தலைவன் படத்தில் இரண்டு கெட்அப் இருக்கு.. கொஞ்சம் சிரமம் எடுத்து நடிச்சிருக்கேன்.

மகிழ் திருமேனி படத்தில் நடித்த அனுபவம்?
ஒவ்வொரு இயக்குனர்கள் கிட்டயும் ஒரு ஒரு விஷயம் கத்துக்குறேன். மகில் சார் பொறுத்தவரைக்கும் டயலாக் எல்லாம் எப்படி சொல்லணும் அப்படிங்கிறது அவர்கிட்ட கத்துட்டேன். இந்த படத்துல நிறைய ஆங்கில வார்த்தைகள் இருக்கு. சார் எனக்கே சில வார்த்தைகள் புரியலையே ஆடியன்ஸ்க்கு புரியுமானு கேட்பேன்.. இந்த படம் எனக்கு புது அனுபவம்.

சமீப காலமா தான் உங்களுக்கு நல்ல கதைகளா வர்ற மாதிரி இருக்கு.. ஏன் சினிமாவை விட நினைக்கிறீங்க?
என்னவோ நான் தான் தமிழ் சினிமாவை காப்பாத்த போறேனா?.. அப்போ வேலை இல்லாமல் இருந்தேன் படங்கள் மட்டும் தயாரித்து கொண்டு ஜாலியா இருந்தேன். இப்போது நிறைய பொறுப்பும் வேலையும் இருக்கு.. சினிமாவில் ஒரு படம் நடித்தால் 3 மாத காலம் போய்விடுகிறது.. வெளியூர் படப்பிடிப்பு போனால் எதும் செய்ய முடியல.. அரசியலில் இன்னும் நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கன்னும் என நினைக்கிறேன்.

ரெட் ஜெயன்ட் நிறைய படங்கள் வெளியிடுவது பற்றி..
சுந்தர் சி சார் படங்கள் தொடர்ந்து ரெட்ஜெண்ட் வெளியிடுறோம். அவர் வந்து கேட்டதால ‛காபி வித் காதல்' படத்தை சரி சார் பன்றோம்னு ஓகே சொல்லிட்டேன்.. அவர் படம் ஒரு காமெடி ஜானர்ல கலர் புல்லா இருக்கும்.. அதே போல ஏ.ஜி.எஸ்., கிட்ட இருந்து ‛லவ் டுடே' படம் போட்டு காமிச்சாங்க கதை எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது. யோகி பாபு, பிரதீப் இவங்க எல்லாருமே நல்லா பண்ணி இருந்தாங்க. அதனால அந்த படத்தையும் ஓகே சொல்லிட்டேன். ரெண்டும் ஒரே நாளில் வந்தது. ரெண்டும் மீடியம் பட்ஜெட் படங்கள்.. சில படங்கள் பார்க்கிறோம். சில படங்களை வேண்டாம் என்று சொல்லிடுவோம், லாக்டவுன்ல நிறைய படங்கள் தேங்கி போய் நிறைய படங்கள் இப்போ வெளியிடற சூழல் வந்துருச்சு..

தியேட்டர் நடத்துபவர்கள் திரையரங்கு டிக்கெட்டை அரசே கொண்டு வந்தால் உண்மை தன்மை இருக்கும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்?
அது இப்போது பேச்சு வார்த்தையில் உள்ளது.. நிறைய மாநிலங்களில் சில விசயங்களை முன்னெடுத்து உள்ளனர். இங்கேயும் சில திட்டங்கள் இருக்கு.. பலரும் பல கருத்துகளை பேசி இருக்காங்க. கலந்து பேசி முடிவு எடுபோம்.

உங்க மனைவி கிருத்திகா இயக்கத்தில் படம் நடிக்கலையே..
கடைசி வரை அது நடக்காது. வேண்டுமானால் அவங்க இயக்கும் படத்தை தயாரிப்பேன்.

சினிமா இண்டஸ்ட்ரிக்கு நீங்க செய்ய நினைக்கிற விஷயங்கள் என்ன?
இந்த ரெண்டு படங்களுடன் நிறுத்திக்கணும்னு நினைக்கிறேன்..

நடிகர் சங்க விஷயம் என்னாச்சு? எதுவரைக்கும் இருக்கு?
விஷால், கார்த்தி வந்து பார்த்துட்டு போனாங்க .. நடிகர் சங்க கட்டடம் வந்து ஒரு கேஸ்ல இருக்கு. அதிலிருந்து வெளிவந்து என்னென்ன தேவைகள் இருக்குன்னு பாத்துட்டு வந்து சொல்றேன்னு சொல்லிட்டு போயிருக்காங்க. சங்கத்திலிருந்து வந்து பார்த்துட்டு போய் இருக்காங்க. தியேட்டர் நடத்துறவங்க வந்து பார்த்துட்டு போய் இருக்காங்க. ஒரே நேரத்தில் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியாது. ஒவ்வொன்னா தான் நாங்க எடுத்து பண்ணனும். அந்த துறை சார்ந்த அமைச்சரிடமும் பேசி ஒரு நல்ல முடிவு எடுப்போம்.

மாமன்னன் படத்தில் வடிவேலு உடன் நடித்த அனுபவம்?
மாமன்னன் படம் முழுக்க முழுக்க அரசியல் படம். இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். வடிவேலு கேரியர்ல இந்த படம் ரொம்ப முக்கியமான படமா இருக்கும்னு நினைக்கிறேன்.

ரெட் ஜெயன்ட் ஒடிடி ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கா?
அதை பற்றி எண்ணம் இல்லை

நீங்க எந்த இயக்குநர் படத்தில் நடிக்க முடியாமல் போனது?
வெற்றி மாறன் சார் படத்தில் நடிக்க விரும்பினேன் முடியவில்லை..

உங்க தொகுதிக்கு எப்போ கடைசியாக போனீங்க? மக்கள் என்ன சொல்றாங்க?
என் தொகுதியில வரக்கூடிய பக்கிங்ஹாம் கால்வாயை சுத்தப்படுத்தக்கூடிய ஒரு திட்டம் இருக்கு. நிறைய சுத்தப்படுத்தி மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். போன வருடத்தை விட இந்த வருடம் பாதிப்புகள் குறைவு.

நீங்க கல்வி துறை, விளையாட்டு துறை அமைச்சராகவும் துணை முதல்வராக வருவதாகும் செய்தி இருக்கே?
ஒன்றரை வருடமா ஏதோ சொல்லிட்டு இருக்காங்க.. எல்லாத்துக்கும் ஒரு உழைப்பு இருக்கு. எல்லாத்துக்கும் அதுக்கான நேரம் இருக்கு. இன்னும் நான் அந்த அளவு வளரல..

ஓடிடி ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கா?
அந்த எண்ணம் இல்லை

நிறைய நட்புகள் இருப்பதனால் உங்களை யாராவது கெஸ்ட் ரோல்ல நடிக்க கூப்பிட்டு இருக்காங்களா?
சசி குமார் படத்துல கலெக்டர் ரோல் இருக்குன்னு நடிக்க கூப்பிட்டாங்க.. கதை நல்லா இருந்தது. ஆனா அது நான் பண்ணல.. கெஸ்ட் ரோல் பண்ற அளவு நான் பெரிய நடிகர் இல்ல.

நீங்க எடுக்கும் முடிவுகளுக்கு உங்களுடைய அப்பா, அம்மா என்ன சொல்லுவாங்க?
அம்மா வந்து சினிமாவுக்கு வரவே கூடாதுன்னு சொன்னாங்க. அப்புறம் வந்துட்டேன். அப்பா எதுவும் சொல்லல. உன் விருப்பம் நல்ல படங்களா பண்ணனும்னு சொல்வாங்க. அம்மா மட்டும் எப்போ தான் சினிமாவை விட போறனு சொல்வாங்க. முழு நேர அரசியல்ல வரணும்னு சொல்லி கேப்பாங்க.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இதுதான் குரு பக்தியா? ராஷ்மிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்இதுதான் குரு பக்தியா? ராஷ்மிகாவை ... கிராமத்து கதையில் நடிக்க ஆசை: அசோக் செல்வன் கிராமத்து கதையில் நடிக்க ஆசை: அசோக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)