ஆண்கள் பற்றி எந்த கமெண்ட்டும் சொல்லாத தபு | 37 வருட கிடப்பிற்குப் பிறகு வெளியாகும் ரஜினிகாந்தின் ஹிந்திப் படம் | ஆஸ்கர் விருது : நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் |

'காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420' போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். கடந்த 2018ல் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை திருமணம் செய்து கொண்டார். 2020ல் மாரடைப்பால் திடீரென காலமானார் சிரஞ்சீவி. அந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்த மேக்னாவிற்கு கணவரின் இழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. சில மாதங்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கணவர் இழப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் மேக்னா படங்களிலும் நடிக்கிறார். இந்நிலையில் இவரை மறு திருமணம் செய்ய சொல்லி சிலர் கூறி வருகின்றனர்.
இதுபற்றி மேக்னா கூறுகையில், ‛‛ஒரு கூட்டம் என்னை 2வது திருமணம் செய்ய சொல்கிறது. சிலர் உங்கள் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்கின்றனர். நான் எதை கேட்பது. பலரும் பல விதமான ஆலோசனைகளை சொல்வார்கள். முடிவு நீ தான் எடுக்க வேண்டும் என எப்போதும் எனது கணவர் கூறுவார். அவர் கூறியபடி இப்போதைக்கு நான் எனது குழந்தையை வளர்ப்பது மற்றும் அவன் எதிர்காலம் பற்றி மட்டும் சிந்திக்கிறேன். வேறு எந்த எண்ணமும் இல்லை'' என்கிறார்.