தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? |
மலையாள திரையுலகில் மம்முட்டியின் மகன் என்கிற அடையாளத்துடன் வாரிசு நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் துல்கர் சல்மான். அவரது முதல் படமே ஆக்சன் பின்னணியில் அமைந்திருந்தது. இதனை தொடர்ந்து தந்தையைப் போல ஆக்சன் நடிகராக மாறுவார் என எதிர்பார்த்தால், தான் நடித்த படங்களில் 75 சதவீதத்திற்கு மேல் காதல் கதைகளாகவே தொடர்ந்து நடித்து வருகிறார் துல்கர். இனிமேல் காதல் கதையே வேண்டாம் என அவர் நினைத்திருந்த நேரத்தில் தான் தற்போது அவர் நடிப்பில் வெளியாக உள்ள சீதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இந்த படத்தின் கதையை சொன்னாராம்.
சற்றே மாறுபட்ட கதைக்களத்தில் வித்தியாசமான காதல் கதையாக இந்த படம் இருந்ததால், வேறு வழியின்றி ஒப்புக்கொண்டு நடித்துள்ளார் துல்கர் சல்மான். வரும் ஆக-5ல் படம் ரிலீசாக உள்ளதை தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, இந்த தகவலை பகிர்ந்து கொண்ட துல்கர் சல்மான், சீதாராமம் படம் தான் நடிக்கும் கடைசி காதல் படமாக இருக்கும் என்றும் இனி மேல் கமர்சியல் அம்சங்கள் கொண்ட படங்களில் அதிக கவனம் செலுத்தப் போகிறேன் என்றும் கூறியுள்ளார்.