சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
தெலுங்கு இயக்குனர் அஜய் ஆண்ட்ரூஸ் இயக்கி வரும் படம் மதராஸி கேங். இதில் அத்யாயன் சுமன் கேங்ஸ்டராக நடிக்கிறார். அனன்யா ராஜ் ஹீரோயின். அஷ்மித் படேல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
படத்தில் நடிப்பது குறித்து அனன்யா ராஜ் கூறியதாவது: மும்பை நகரில் உள்ள மூன்று கும்பல்களைப் பற்றிய கதை. குறிப்பாக தாதர் மற்றும் சிவாஜி பூங்கா இடையேயான பகுதிகளை மையமாகக் கொண்டது. நிறைய சேரிகள் உள்ளன, இங்குதான் இந்த கும்பல்கள் உள்ளன. அப்பகுதியில் வலுவான கேங்காக உருவெடுத்த மதராஸி கேங்கின் கதை இது.
என்னுடைய கேரக்டரின் பெயர் சரிதா, சேரிகளில் வளர்ந்தவள். மகாராஷ்டிரா கேங்கை சேர்ந்தவள். கேங்க்ஸ்டர்களில் ஒருவரின் காதலியாக நடித்திருக்கிறேன். உண்மையில் மூன்று மொழிகளில் படமாகி உள்ளது. தமிழில் பேசுவது கடினமாக இருந்தது. படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறது. விரைவில் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறேன். என்கிறார் அனன்யா.