ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' | அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! |

'பீஸ்ட்' படம் வருவதற்கு முன்பே விஜய்யின் அடுத்த படமான விஜய் 66 பிரபலமாகி வருகிறது. இப்படத்தின் பூஜை இன்று(ஏப்., 6) சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி பைடிபள்ளி, விஜய், ராஷ்மிகா மந்தானா, சரத்குமார் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விஜய்யின் தீவிர ரசிகை ராஷ்மிகா. இதற்கு முன்பு தெலுங்கில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் சிறிய வயது முதலே தான் விஜய்யின் ரசிகை என்பதை சொல்லியிருந்தார். விஜய்யின் 66வது படம் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே அப்படத்தில் ராஷ்மிகா தான் கதாநாயகி என்று சொல்லி வந்தார்கள். நேற்று ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார்கள்.
![]() |