தெலுங்கில் 3 பொங்கல் படங்கள் 100 கோடி வசூல் | ‛ஜே.பேபி' இயக்குனருடன் கைகோர்த்த மணிகண்டன் | தொடரும் பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த மோகன்லால் : கதாநாயகியாக நடிக்கும் மீரா ஜாஸ்மின் | 'சங்கராந்திகி வஸ்துனம்' ரீமேக்கில் அக்ஷய்குமார் | சிறிய படங்களுக்கு சிக்கலை தருகிறதா ரீ ரிலீஸ் படங்கள்? | அர்ஜூன் தாஸ், அன்னா பென் நடிப்பில் 'கான் சிட்டி' | ஜன 21ல் சுந்தர்.சி, விஷால் படத்தின் முதல் பார்வை வெளியீடு | இளையராஜாவுக்கு பத்மபாணி விருது | சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி |

இயக்குனர் ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ஆர்ஆர்ஆர். ரிலீஸாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு வருகின்றனர். பான் இந்தியா ரிலீஸ் என்பதால் சமீபத்தில் மும்பையில் மிகப்பிரமாண்டமான முறையில் புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக சல்மான் கான் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்காக மும்பை சென்றபோது, அப்படியே மும்பையில் உள்ள ராணாவின் வீட்டிற்கும் விசிட் அடித்துள்ளார்கள். பாகுபலி படம் மூலம் தனக்கு புதிய பாதை போட்டு தந்த இயக்குனர் ராஜமவுலியை தனது வீட்டுக்கு அழைத்து உபசரித்து மகிழ்ந்துள்ள ராணா, தனது வீட்டு பால்கனியில் நின்றபடி தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.




