ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' |
பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன். இவர் தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன், சோலோ படங்களில் நடித்துள்ளார். நிலா, அமெரிக்க மாப்பிள்ளை உள்பட சில வெப் சீரிசிலும் நடித்துள்ளார். கன்னடத்தில் விஸ்மையா என்ற படத்தில் நடித்தபோது பிரபல நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2018ம் ஆண்டு மீ டூ புகார் கூறினார். இதுகுறித்து பெங்களூரு போலீசிலும் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு கர்நாடக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு தொடரப்பட்டு 3 ஆண்டுகள் ஆனபிறகும் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அர்ஜூனுக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று போலீசார் கூறி வந்தனர். மேலும் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், சக நடிகர்கள், அர்ஜூனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளையும் முன் வைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று நீதிமன்றத்தில் எந்தவிதமான சாட்சிகளும் இல்லையென்று போலீசார் ஆவணங்களை தாக்கல் செய்தனர். அதை ஏற்ற நீதிமன்றம் போதிய, ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் அர்ஜூனை இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.