பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

மலையாள திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் வினயன். தமிழில் விக்ரம் நடித்த காசி மற்றும் அற்புத தீவு உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். பெரும்பாலும் கேரள அரசு விருது அறிவிக்கப்படும் போதெல்லாம் அதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்துவதுடன், விமர்சனங்களையும் அவ்வப்போது முன்வைக்க தயங்காதவர் வினயன். அந்த வகையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கேரள அரசு விருதுகள் குறித்து இவர் விமர்சிக்காவிட்டாலும் இந்த விருது வழங்கும் விஷயத்தில் திரைப்பட அகாடமியின் சேர்மன் ஆக இருக்கும் பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித்தின் தலையீடு அதிகமாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‛‛கேரள திரைப்பட அகாடமியின் சேர்மன் ஆக இருக்கும் இயக்குனர் ரஞ்சித், படங்களை தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவிடம் தனது செல்வாக்கை தொடர்ந்து பயன்படுத்துகிறார். தான் மோதல் போக்கை கடைபிடிக்கும் நபர்களின் படங்களை தவிர்த்து விடுமாறு நடுவர் குழுவை தனது விருப்பப்படி ஆட்டி வைத்து வருகிறார். கடந்த வருடம் என்னுடைய இயக்கத்தில் 19ஆம் நூற்றாண்டு என்கிற படம் வெளியானது. அந்த படம் சூப்பர் படம் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. அதேசமயம் என் படத்தை பார்க்க கூடாது என தொடர்ந்து பல வருடங்களாக இதுபோன்று திட்டமிட்டு என் படங்களை புறக்கணிக்க செய்து வருகிறார்" என்று குற்றம் சாட்டியுள்ளார் இயக்குனர் வினயன்.