ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த காலா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தவர் ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி. அவர் இப்போது சின்னத்திரை நிகழ்ச்சிக்கு நடுவர் ஆகியிருக்கிறார். காலா படத்திற்கு பிறகு தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று கணிக்கப்பட்டவர், சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
ஜீ டி.வி ஹிந்தியில் ஒளிபரப்பும் பிரமாண்ட ரியாலிட்டி ஷோ ட்ரீம்பாஸ். சிறுவர்களின் நடிப்பு மற்றும் காமெடி திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி இது. அருண் செஷகுமார் இயக்கும் இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன் விவேக் ஓபராய், சோனாலி பிந்த்ரே, அனுராக் பாசு நடுவர்களாக இருந்தார்கள். தற்போது சோனாலி பிந்த்ரேவுக்கு பதிலாக ஹூமா குரேஷி நடுவராகியிருக்கிறார். கேங்ஸ் ஆப் வசிப்பூர் படத்தில் அறிமுகமான ஹூமா, காலா உள்பட 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.