ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கி வரும் பிரம்மோற்சவம் எனும் குடும்பபொழுதுபோக்கு திரைப்படம் மே 20ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பிரம்மோற்சவம் படத்தின் திரையிடும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் மகேஷ் பாபு ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்புகள் இன்னும் நிறைவடையாததால் பிரம்மோற்சவம் திரைப்படம் மே 27ல் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.
சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா என மூன்று நாயகிகள் இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மே 7ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவம் படத்தின் வெளியீட்டு தேதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் நிதினின் அ.ஆ, சாய் தரண் தேஜின் சுப்ரீம் போன்ற படங்களின் திரையிடும் தேதியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.