ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தவாரம் மலையாளத்தில் மம்முட்டி நடித்துள்ள 'பாதமாறி' வெளியாகியுள்ளது. அதுவும் மம்முட்டி படம் என்பதால் தான் தைரியமாக ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.. காரணம் கடந்த 2௦ நாட்களாக பிருத்விராஜின் 'என்னு நிண்டே மொய்தீன்' புயல் தான் கேரளாவை சுழன்றடித்துவருகிறது.. தற்போது அதன் தாக்கம் தணிந்திருக்கும் என்றுதான் மம்முட்டி படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.. கூடவே மீரா ஜாஸ்மின் நடித்துள்ள 'இதினும் அப்புறம்' படமும் இன்று வெளியாகியுள்ளது... இது மம்முட்டி படத்துக்கு சரியான டப்' கொடுக்காது என்றாலும், மம்முட்டிக்கு போட்டி வேறு ரூபத்தில் வந்திறங்கியுள்ளது.
அவர் வேறு யாருமல்ல.. 'ருத்ரமாதேவி' வடிவத்தில் இன்று கேரளாவில் ரிலீசாகியிருக்கும் அனுஷ்காவின் படம் தான். அதிலும் மலையாள மொழியிலேயே வேறு ரிலீசாகியிருக்கிறது. ஏற்கனவே அருந்ததி, பாகுபலி மூலம் மலையாள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள அனுஷ்கா, தற்போது நடித்துள்ளது சரித்திரப்படம் என்பதால் ரசிகர்களின் கவனம் அனுஷ்காவின் பக்கம் திரும்பவும் வாய்ப்புள்ளது.. மேலும் இதில் ஹீரோவாக நடித்துள்ள அல்லு அர்ஜூன் மலையாள ரசிகர்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள ஒரே தெலுங்கு நடிகர் என்பதால் அவரும் தன் பங்கிற்கு கூட்டத்தை இழுப்பார். ஆனால் மம்முட்டி படத்தை இயக்கியுள்ளவர் தேசிய விருதுபெற்ற சலீம் அஹமது என்பதும், 'பாதமாறி' முழுக்க முழுக்க கமர்ஷியலாக உருவாகியுள்ளது என்பதும் மம்முட்டி ரசிகர்களை நம்பிக்கை கொள்ள வைத்திருக்கிறது.