ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? | சித்தப்பா பவன்கல்யாணை சந்தித்த ராம் சரண் | விக்ரமின் ‛வீர தீர சூரன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! | மோகன் நடித்துள்ள ஹரா ஜூன் 7ம் தேதி திரைக்கு வருகிறது! | விஜய் அரசியல் கட்சியின் நிர்வாகிகள் பெயர் அறிவிப்பு! | ஹிட் சீரியலில் முக்கிய நடிகை மாற்றம் | சினிமாவில் அடிவாங்கினா கூட வருத்தப்படுவாங்க அம்மா: நடிகர் ஹரிகிருஷ்ணன் நெகிழ்ச்சி | எழுத்தாளர்கள் மனதுக்குள் நடிப்பவர்கள்! அழகாக சொல்கிறார் சந்திரகுமார் |
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் ‛க்ராண்ட் ஃபினாலே' இன்று (ஜனவரி, 22) நடைபெற்றது. இறுதிபோட்டியாளர்களான அசீம், ஷிவின், விக்ரமன் ஆகிய மூவரில் யார் வின்னர் என்று உலகெங்கிலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இறுதிநாளான இன்று ஷிவின் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், வெல்லப்போவது விக்ரமனா? அசீமா? என பரபரப்பான இறுதிக்கட்டம் ரசிகர்களின் ஹார்ட்பீட்டை எகிறச் செய்தது. ஒருவழியாக வின்னர் அசீம் தான் என்பதை கையை தூக்கிபிடித்து கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து வெற்றியாளரான அசீமுக்கு 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகையுடன் மாருதி சுசுகி கார் நிறுவனத்தின் நவீன சொகுசு வகை காரான ப்ரீசா காரும் வழங்கப்பட்டது.
டைட்டில் கோப்பையை கையில் வாங்கிய அசீம், 'எனது வெற்றி இறைவனுக்கு. எனக்கு சிறுவயதிலிருந்தே நல்லதை மட்டுமே சொல்லி வளர்த்த பெற்றோருக்கு நன்றி' எனக்கூறினார்.
மேலும், அசீமை பற்றி முதல்வாரத்திலிருந்தே நெகட்டிவாக பல கமெண்டுகள் வந்த நிலையில், '11 வாரமும் என்னை நாமினேட் செய்யுங்கள். மக்களின் ஆதரவுடன் நான் ஜெயித்துக்காட்டுவேன்' என்று கூறியிருந்தார். அதை குறிப்பிட்டு 'இதோ ரிசல்ட்' என கெத்தாக பிக்பாஸ் கோப்பையை தூக்கிக்காட்டினார்.
அசீமின் வெற்றிக்கு சக ஹவுஸ்மேட்டுகள் உட்பட பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.