என்கிட்ட மோதாதே... நான் ராஜாதி ராஜனடா...! | உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் | அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ |
பாகுபலி-2விற்கு பிறகு அனுஷ்கா நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. 2018ல் பாகமதி, 2019ல் சைரா நரசிம்ம ரெட்டி(சிறப்பு வேடம்), 2020ல் நிசப்தம் என வருடம் ஒரு படத்தில் தான் நடித்துள்ளார். இந்தஆண்டில் மகேஷ்.பி இயக்கும் ஒரு காதல் கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
யு.வி.கிரியேசன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மே மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஆகஸ்டு மாதத்தில் தொடங்கயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டில் அனுஷ்கா நடிப்பில் எந்த படமும் வெளிவராத நிலை ஏற்பட்டுள்ளது.