ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் பிரகாஷ்ராஜ் "தோணி" படத்தின் மூலம் இயக்குனரானார். தற்போது மீண்டும் படம் இயக்குகிறார். தோணி மராட்டிய படத்தின் ரீமேக். இப்போது மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற "சால்ட் அண்ட் பெப்பர்" படத்தை தமிழ், மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்கிறார். மலையாளத்தில் லால் நடித்த கேரக்டரில் பிரகாஷ்ராஜும், ஸ்வேத மேனன் நடித்த கேரக்டரில் தபுவும் நடிக்கிறார்கள். "தமிழில் உன் சமையல் அறையில்" என்றும், தெலுங்கில் "உலவச்சாறு பிரியாணி" என்றும் பெயர் வைத்திருக்கிறார். "லவ் இஸ் குக்கிங்" என்பது இரண்டு மொழிக்கும் பொதுவான சப் டைட்டில். முதலில் மலையாளப் படத்தை இயக்கின ஆஷிக் அபு இயக்குவதாக இருந்தது. அவர் தற்போது தனது புதிய படத்தில் பிசியா இருப்பதால் மறுத்து விட்டார். பிரகாஷ்ராஜின் ஆஸ்தான இயக்குனர் ராதாமோகன் இயக்குவார் என்று கூறப்பட்டது. அவர் கவுரவம் படத்தில் பிசியாக இருக்கிறார். அதனால் தானே இயக்க பிரகாஷ்ராஜ் முடிவு செய்திருக்கிறார்.