ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏழாம் அறிவு, 3 ஆகிய படங்களில் நடித்த ஸ்ருதிஹாசனுக்கு அதன்பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லை. அதனால் தற்போது தெலுங்கு, இந்தி என்று பிசியாகி விட்டார். பிரபுதேவா இந்தியில் இயக்கும் படம் உள்பட 4 படங்கள் வரை நடித்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கில் ராம்சரண் தேஜாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கயிருந்த எவடு என்ற படத்தை ஸ்ருதிஹாசன் தட்டிப்பறித்து விட்டதாக செய்திகள் பரவியுள்ளன.
ஆனால் இதுபற்றி ஸ்ருதிஹாசனை கேட்டபோது, சினிமாவில் நடிக்கத் தொடங்கியதில் இருந்து, என்னைத்தேடி வரும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். மற்ற நடிகைகளுக்கு செல்லும் படங்களை குறுக்கால புகுந்து என் பக்கம் திருப்பும் குறுக்கு புத்தியுடன் ஒருநாளும் நான் செயல்பட்டதில்லை. செயல்படவும் மாட்டேன். எவடு படத்தைப்பொறுத்தவரை முதலில் என்னிடம்தான் தொடர்பு கொண்டு கேட்டார்கள். அவர்கள் கேட்ட தேதியில் என்னிடம் கால்சீட் இருந்ததால் ஒத்துக்கொண்டேன். ஆனால் அதே படத்தில் சமந்தா நடிக்கயிருந்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்கிறார் ஸ்ருதி.