Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கும்கி தீபாவளிக்கு ரிலீசாகாதது ஏன்: பிரபு விளக்கம்

12 நவ, 2012 - 12:05 IST
எழுத்தின் அளவு:

சிவாஜியின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு அறிமுகமாகும் படம் கும்கி. லிங்குசாமி தயாரிப்பில் பிரபுசாலமன் இயக்கி உள்ளார். லட்சுமிமேனன் ஹீரோயின். இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மைனா வெற்றிக்கு பிறகு வரும் பிரபுசாலமன் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 60 ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜி நடித்த முதல் படமான பராசக்தி தீபாவளி அன்று வெளியானது. பராசக்தியின் மணிவிழா ஆண்டில் பேரன் நடித்த கும்கி வெளிவர இருந்ததால் சிவாஜி குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் திடீரென கும்கியின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இது சிவாஜி குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கும்கி வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருந்த சிவாஜி குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்தனர். என்றாலும் பிரபு தன் மகனை முறைப்படி பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

அதில் பிரபு பேசியதாவது: நீங்கள்லாம்(பத்திரிகையாளர்கள்) எங்க குடும்பத்தில ஒருத்தரா இருக்கீங்க. எங்கப்பாவ அண்ணன்னு வாயாற அழைச்சவங்க நீங்க. அந்த வகையில எனக்கு நிறைய பேர் சித்தப்பாக்களா இருக்கீங்க. எங்க குடும்பத்துல என்ன நல்லது கெட்டது நடந்தாலும் கூடவே இருந்திருக்கீங்க. நான் அறிமுகமானபோது நம்ம வீட்டுப் பிள்ளை நடிக்க வந்திருக்கான்னு தூக்கி வச்சு கொஞ்சுனீங்க. வளர்த்து விட்டீங்க. தப்பு செஞ்சப்போ தலையில குட்டவும் செஞ்சீங்க. அதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு. இப்போ என் மகன் வந்துருக்கான். அவனுக்கு நடிக்க ஆர்வம் இருந்தது எங்களுக்கெல்லாம் தெரியாது. அண்ணன்தான்(ராம்குமார்) அதை கண்டுபிடிச்சு. அவனை அமெரிக்காவுக்கு அனுப்பி சினிமா படிக்க வச்சார். திரும்பி வந்தவன் எங்க செல்வாக்கை பயன்படுத்தாம, ஏன் பல இடத்துல சிவாஜி பேரன்னு சொல்லாமக்கூட போய் சான்ஸ் கேட்டுருக்கான். அப்படி வந்ததுதான் கும்கி பட சான்சும். இவனே போயி கேட்டு பிரபு சாலமன் செலக்ட் பண்ணின பிறகுதான் எனக்கே சொன்னார். இந்த வாய்ப்பு அவனே தேடிக்கிட்டது. அவனை உங்க கையில ஒப்படைக்கிறேன். எங்கப்பாவுக்கு உறுதுணையா இருந்த மாதிரி, எனக்கு துணையா இருந்த மாதிரி என் மகனையும் பத்திரமா பார்த்துக்குங்க.

இந்த தீபாவளிக்கு ரிலீசாகும்னு நாங்களும் ஆவலா இருந்தோம். ஆனா பிரபு சாலமன், படத்துல கொஞ்சம் டெக்னிக் வேலை பாக்கியிருக்கு தீபாவளிக்கு அப்புறம் ரிலீஸ் பண்ணிக்கலாமுன்னு சொல்லிட்டாரு. ஒரு இயக்குனரா அது அவரோட உரிமை. படத்தை எப்போ ரிலீஸ் பண்ணணுங்றது பிரபு சாலமன், லிங்குசாமியோட பொறுப்பு. அதை அவுங்ககிட்ட கொடுத்துட்டோம். இந்த வருட இறுதிக்குள்ள ரிலீசாகிடும்னு நம்புறோம். விக்ரம் அடுத்த படத்துல நடிக்க ஆரம்பிச்சிட்டாலும் கும்கி ரிலீசத்தான் எங்க குடும்பமே ஆர்வமா எதிர்பார்த்துக்கிட்டு இருக்கு. இவ்வாறு பிரபு உருக்கமாக பேசினார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

velladurai - rajapalayam  ( Posted via: Dinamalar Android App )
14 நவ, 2012 - 09:58 Report Abuse
velladurai ரெம்பெ முக்கியம்
Rate this:
ஐஸ்வண்டி - Icelaandu ,இஸ்ல் ஆப் மேன்
14 நவ, 2012 - 09:31 Report Abuse
 ஐஸ்வண்டி ஏலேய் நல்லா வண்டிவண்டியா ஐஸ் வக்கிரத விட்டுபுட்டு ஐஸ் வண்டியவே அவனுக மேல வைக்கிற ஜன்னி வந்து ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிரபோகுது. சரி நீ பொலசுட்டுபோ.
Rate this:
Raasa Ravindiran - Dubai  ( Posted via: Dinamalar Android App )
14 நவ, 2012 - 04:45 Report Abuse
Raasa Ravindiran குட்டி தி்லகம் விக்ரம் வருக வருக
Rate this:
dinesh - salem  ( Posted via: Dinamalar Android App )
12 நவ, 2012 - 13:56 Report Abuse
dinesh we r also sir...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in