சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! |
எந்திரன் படத்தில் அறிமுமாகி இரண்டு ஆண்டுக்குள் 150 பாடல்களுக்கு மேல் எழுதி குவித்து விட்டார் மதன் கார்க்கி. வைரமுத்துவின் வாரிசு. பல படங்களில் முழுப் பாடல்களையும் எழுதி வருகிறார். அவர் அளித்த பேட்டி: நான் சினிமாவுக்கு பாட்டு எழுத வருவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. வெளிநாட்டு படிப்பு, பெரிய உத்யோகம்தான் கனவாக இருந்தது. அப்பாவின் கவியரங்கங்களுக்குகூட ஆர்வமாக சென்றதில்லை இப்போது 180 பாடல்கள் வரை எழுதியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
பாடல் எழுதுவதற்கென்று எந்த இடத்தையும் தேர்வு செய்வதில்லை. அப்பாவுக்கு பூங்கா, மொட்டை மாடிபோன்று எனக்கு காபி ஷாப்பில் அமர்ந்து பாட்டு எழுதுவது பிடிக்கும். மணிக்கணக்கில் காபி ஷாப்பில் உட்கார்ந்திருப்பேன். ஒரு பாடலை 5 நிமிடத்திலும் எழுதி இருகிறேன். 5நாட்களிலும் எழுதியிருக்கிறேன். எந்த படத்துக்கு பாட்டு எழுதினாலும் முழு கதையையும் கேட்க மாட்டேன். அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் பாடல்களுக்கான சூழ்நிலையை மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.
படத்தின் கேரக்டருக்கேற்ப எழுதும் பாடல் வரிகளை தேவையில்லாத விஷயங்களுடன் முடிச்சு போட்டு அதனை நீக்க வலியுறுத்தும் போக்கு அதிகரித்திருப்பது வருத்தமாக இருக்கிறது. ஒலிப்பதிவு செய்யப்பட்ட பிறகு வரிகளை நீக்கி மீண்டும் ஒலிப்பதிவு செய்வது தயாரிப்பாளருக்கு சிரமத்தை கொடுக்கும் விஷயம். இருந்தாலும் நாங்களும் பொறுப்பை உணர்ந்துதான் எழுதுகிறோம்.