Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

டைரக்டர் பாண்டிராஜ் போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார்!

Director pandiraj files complaintதமிழ் சினிமா டைரக்டர் பாண்டிராஜ், சென்னை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். பசங்க படத்தின் மூலம் பிரபலமானவர் டைரக்டர் பாண்டிராஜ். இவர் தனது வக்கீல்கள் நமோநாராயணன், ரகுநாத் ஆகியோருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கூடுதல் கமிஷனர் அபய் குமார்சிங்கை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், நான் இயக்கிய முதல் படமான பசங்க திரைப்படம் எனக்கு ஜனாதிபதி விருதை பெற்று தந்தது. அடுத்து நான் `மெரினா என்ற படத்தை தயாரித்து, இயக்கி வெளியிட்டேன். அந்த படமும் நன்றாக ஓடியது. இந்த நிலையில், பாலமுருகன் என்பவர், எனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகார் மனு உண்மையானதல்ல. அவர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர். மெரினா படத்தை எடுப்பதற்கு ரூ.50 லட்சம் பண முதலீடு செய்வதாக சொன்னார். ஆனால் அவர் சொன்னபடி ரூ.50 லட்சம் தரவில்லை. ரூ.9 லட்சம் மட்டுமே தந்தார்.

ஆனால் ரூ.50 லட்சம் தந்ததாக பொய்யான புகார் கொடுத்துள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. அவர் கொடுத்த ரூ.9 லட்சம் பணத்தையும் திருப்பித்தர தயாராக இருப்பதாக நான் தெரிவித்த பிறகும், என்மீது பொய் புகார் கொடுத்துள்ளார். பொய் புகார் கொடுத்த அவர்மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன், என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வளசரவாக்கம் உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags »
Director pandiraj, டைரக்டர் பாண்டிராஜ்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

solai melur - madurai  ( Posted via: Dinamalar Android App )
2012-05-27 17:29:29 Report Abuse
solai melur டைரக்டர் சார் நம்பினவன ஏமாத்தலாமா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Suha - Singapore,இந்தியா
2012-05-26 21:55:08 Report Abuse
 Suha Utter வேஸ்ட் director
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in