ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'இந்தியன்'. லஞ்சம் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து ரோபோ என்ற படத்தில் கமல் - ஷங்கர் மீண்டும் இணைந்து பணியாற்ற இருந்தனர்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்தப்படம் ட்ராப்பானது. அதுதான் ரஜினி நடிக்க எந்திரன் படமாக வெளியானது. 22 வருடங்கள் கழித்து, 'இந்தியன் 2' படத்தில் கமல் ஷங்கர் இருவரும் மறுபடி இணைந்திருக்கிறார்கள். இந்தப்படத்தை தெலுங்குப்படத் தயாரிப்பாளர் தில்ராஜு முதலில் தயாரிப்பதாக இருந்தது.
பிறகு அவர் விலகிவிட்டார். தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கமலின் பிறந்த நாளின் போது, இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. நவம்பர் 12-ம் தேதி தொடங்கப்பட்டு இப்படத்துக்கான அரங்குகள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக சமீபத்ததில் இந்தியன் தாத்தா கெட்டப்பை கமலுக்கு போட்டுப் பார்த்திருக்கிறார் ஷங்கர். அதை வைத்து ஒரு போட்டோஷூட்டையும் முடித்துவிட்டார்.
இந்தியன் 2 படத்தில் முதலில் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியானது. அவர் 6 கோடி சம்பளம் கேட்டதோடு, நிறைய கண்டிஷன்களும் போட்டிருக்கிறார். அவருடைய கண்டிஷன் ஷங்கருக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் காஜல் அகர்வால் ஒரு முக்கிய கதாபாத்திரத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கான பிரத்யேக மேக்கப் டெஸ்ட் சமீபத்தில் வெளிநாட்டில் நடைபெற்றுள்ளது. முதன்முறையாக ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் நடிக்கவுள்ளதால், மிகவும் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறாராம் காஜல் அகர்வால்.
இந்தியன் 2 படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் முறையான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.