ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் 2.0. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
2.0 படத்தில் அக்ஷய்குமாரின் பட்சிராஜன் கதாபாத்திரம், ரஜினி ஏற்றுள்ள வசீகரன், சிட்டி கதாபாத்திரங்களுக்கு இணையான கதாபாத்திரமாக, அமைந்திருப்பதாக ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டி வருகிறார்கள். நவீன 3டி தொழில்நுட்பத்தில், 4டி ஒலிநுட்பத்தில் உலகத்தரத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் ஷங்கர்.
ஹாலிவுட் சினிமா தொழில்நுட்பத்துக்கு சவால்விடும் வகையில் 2.0 படத்தை உருவவாக்கியிருந்தாலும், இப்படத்தின் முதல் நாள் வசூல் திருப்திகரமானதாக இல்லை. இதனால் தயாரிப்பு தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. எனவே 2.0 படத்தை விளம்பரப்படுத்தி மேலும் வசூலை அள்ள முயற்சிகளை கையாண்டு வருகின்றனர்.
2.0 படத்தின் க்ளைமாக்சில் 3.0 என்ற பெயரில் குட்டி ரோபோவாக ரஜினி வருவார். இக்காட்சியை அக்ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து, “2.0வில் 3.0வையும் பார்க்கலாம். குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். இந்த வார விடுமுறையை கொண்டாடுங்கள்” என்று தெரிவித்திருக்கிறார் அக்ஷய் குமார்.
2.0வில் 3.0 ரஜினியின் வீடியோவை நடிகர் அக்ஷய் குமார் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதால் 2.0 படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, 2.0 படத்துக்கு கமர்ஷியல் வெற்றி கிடைத்தால் 3.0 எடுக்கும் எண்ணமும் ஷங்கருக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
Meet 3.0 in 2.0! The perfect movie outing for your children this weekend, #2Point0 in cinemas now!
BookMyShow : https://t.co/PLPkj4EBp2
Paytm : https://t.co/LqTSSKEXvp@2Point0movie @shankarshanmugh @DharmaMovies @LycaProductions pic.twitter.com/w5WmuHwJUd
— Akshay Kumar (@akshaykumar) December 1, 2018