ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'வரதன்' படம் ஹிட்டான சந்தோஷத்தில் இருக்கும் பஹத் பாசில், தனது அடுத்த படமும் ஹிட்டாகும் என உறுதியாக நம்புகிறார். காரணம் மலையாள சினிமாவின் மிக முக்கிய சீனியர் இயக்குனர்களில் ஒருவரான சத்யன் அந்திக்காடுதான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் பெயர் 'ஞான் பிரகாசன்'.
கதாநாயகியாக நிகிலா விமல் நடித்துள்ள இந்தப்படம் வரும் கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாக இருக்கிறது. கடந்த 2013ல் சத்யன் அந்திக்காடு -பஹத் பாசில் இருவரும் 'ஒரு இந்தியன் பிரணயகதா' என்கிற படத்தில் முதன்முதலாக கூட்டணி அமைத்தனர். அந்தவருடம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியான இந்தப்படம், அப்போது அடித்த 'த்ரிஷ்யம்' புயலில் இருந்து தப்பித்த ஒரே மலையாள படம் என்கிற பெருமையை பெற்றது.
அந்த படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இரண்டாவது முறையாக இந்தப்படத்தில் இணைந்துள்ளனர் என்பதால் இந்தப்படத்தையும் கிறிஸ்துமஸில் ரிலீஸ் செய்யவேண்டும் என்பதற்காகவே, ராப்பகலாக இதில் உழைத்து நடித்து கொடுத்திருக்கிறார் பஹத் பாசில்