ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கி உள்ள படம் சீதக்காதி. 80 வயது நாடக நடிகராக அய்யா ஆதிமூலம் என்ற கேரக்டரில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.
இவருடன் அர்ச்சனா, மவுலி, பக்ஸ், இயக்குநர் மகேந்திரன், வைபவ்வின் அண்ணன் சுனில் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 96 இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதியின் 25வது படமாக உருவாகி உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
3.09 நிமிடம் ஓடும் இந்த டிரைலரில், ரசிகர்கள் கொண்டாடும் அய்யா விஜய் சேதுபதி, திடீரென படப்பிடிப்புகளில் நடிக்காமல் காணாமல் போய் விடுகிறார். அவரை எதிர்த்து தயாரிப்பாளர்கள் குரல் கொடுக்க, அடுத்து என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை என டிரைலரை பார்க்கும்போது புரிகிறது. இதன் உடன் அந்தக்கால நாடகத்தின் மகத்துவமும் இடம்பெறும் என தெரிகிறது.
டிரைலரில், விஜய் சேதுபதி, வயதானவராக அப்படியே பொருந்தியிருக்கிறார். அவரின் நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது. டிரைலரின் இறுதியில், "ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான், நானே சரித்திரமாக மாறிவிட்டேனே..." என்ற ஒரே ஒரு வசனத்தை மட்டுமே விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
இந்த டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.