ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமலையும் ஜெயராமையும் முப்பது வருடங்களுக்கு முன்பே கூட்டணி சேர்த்து மலையாளத்தில் 'சாணக்யன்' என்கிற படத்தை இயக்கியவர் டி.கே.ராஜீவ் குமார்.. நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் கமலின் 'சபாஷ் நாயுடு' படத்தையும் முதலில் இவர்தான் இயக்குவதாக இருந்து பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்தப்படத்தில் இருந்து விலகினார்.
இந்தநிலையில் மலையாளத்தில் 'கோலாம்பி' என்கிற படத்தை இயக்கி வருகிறார் டி.கே.ராஜீவ் குமார். கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். இதற்கு முன் 2௦11ல் இவர் இயக்கிய 'தல்சமயம் ஒரு பெண்குட்டி' என்கிற படத்திலும் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் தீவிர கவனம் செலுத்திவரும் நித்யா மேனன், தற்போது நடித்து முடித்துள்ள 'பிராண' என்கிற படம் விரைவில் வெளியாக இருக்கிறது.