ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் சேதுபதி நடிப்பில் இந்தவாரம் ரிலீஸாகியிருக்கும் '96' படத்தை, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ளார். ஆர்யா நடிப்பில் வெளியான 'கலாபக் காதலன்', 'ரோமியோ ஜூலியட்', 'வீரசிவாஜி', 'கத்தி சண்டை' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளது. விஷால் நடித்த 'துப்பறிவாளன்' படத்தை வாங்கி வெளியிட்டது.
ரிலீஸ் சமயத்தில் சில படங்களுக்கு பைனான்ஸ் பிரச்சினை வருவது போல, '96' படத்துக்கும் பிரச்சினை வந்தது. 96 படத்தின் மூலம் தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் வீரசிவாஜி, 'கத்தி சண்ட' படங்களினால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, '96' படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது.
சுமார் 4.5 கோடியை விஜய்சேதுபதி செட்டில் பண்ணுவதாக எழுதிக்கொடுத்த பிறகு 96 படத்தை வெளியிட பைனான்ஸியர் அனுமதி கொடுத்தார். கத்திசண்டை படம் விவகாரம் தொடர்பாக அந்தப்படத்தை தயாரித்த நந்தகோபால், விஷாலுக்கு கொடுக்க வேண்டிய ரூ.1.50 கோடியையும் விஜய் சேதுபதியே கடைசிநேரத்தில் செட்டில் செய்துள்ளார்.
இந்த விஷயத்தில் விஷாலை கெட்டவராக சித்தரித்து தயாரிப்பாளர்கள் வாய்ஸ் கொடுக்க, இன்னொரு பக்கம் மீடியாக்களில் செய்திகள் வர, வெறுத்துப்போன விஷால், தனக்கு விஜய்சேதுபதி தருவதாக ஒப்புக்கொண்ட 1.5 கோடியை தர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.