ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லைகா தயாரிப்பில் சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப்படம் தெலுங்கில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டான அட்டாரின்டிகி தாரடி என்ற படத்தின் ரீ-மேக். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டடோபர் 1 ஆம் தேதி அன்று ஜார்ஜியா நாட்டில் துவங்குகிறது என்று சொல்லப்பட்டது. ஆனால் இரண்டு வாரம் முன்னதாகவே அங்கு சென்றுவிட்ட படக்குழுவினர் இன்று முதல் படப்பிடிப்பை தொடங்கிவிட்டனர். தொடர்ந்து 45 நாட்கள் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறதாம். அதாவது படத்தின் 90 சதவிகித காட்சிகளை அங்கேயே படமாக்குகின்றனர்.
இதற்கு முன் ஜார்ஜியா நாட்டில் அஜித் நடித்த பில்லா-2, விஜய்சேதுபதி நடித்த 'ஜுங்கா', கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள 'துருவநட்சத்திரம்' ஆகிய படங்களின் படபிடிப்புகள் நடைபெற்றுள்ளன. இந்த படங்களை தொடர்ந்து இப்போது சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெறுகிறது.
கோலிவுட் இயக்குநர்களின் பார்வை ஜார்ஜியாவை நோக்கி திரும்பியது ஏன்? அங்கே செல்ல விசா கெடுபிடிகள் அதிகம் இல்லை. அரைவல் விசா என்று சொல்லப்படுகிற சிஸ்டம் அங்கு உள்ளது. அதோடு, அங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு அதிக கட்டணம் கிடையாதாம்.