ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள திரையுலகில் இந்த வருடம் முன்னெப்போதிலும் இல்லாத வகையில் சரித்திர படங்களும், பிரமாண்ட பட்ஜெட் படங்களும் உருவாகி வருகின்றன. இதில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது மோகன்லால் நடிப்பில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக உருவாகிவரும் ஒடியன் திரைப்படம் தான்.
மோகன்லால் பிளாக் மேஜிசியனாக நடிக்கிறார் என்பதுடன், அவ்வப்போது அவரது வித்தியாசமான தோற்றங்களுடன் வெளியாகும் இந்தப்படத்தின் போஸ்டர்களும், இந்தப்படத்தில் ஏதோ விஷயம் உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கின்றன. அறிமுக இயக்குனர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வரும் அக்-11-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இந்தப்படத்தின் டிரைலரை வரும் ஆக-15 அன்று வெளியிட இருக்கிறார்கள்.. இந்த டிரைலரை மோகன்லாலின் ஆப்த நண்பரான மம்முட்டி வெளியிட இருக்கிறார் என்பதுதான் ஹைலைட்.