ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜிவி.பிரகாஷ்குமார் நடித்த நாச்சியார் படத்தை அடுத்து வர்மா என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலா. நடிகர் விக்ரம் உடைய மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் இது.
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப்பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' என்ற படத்தின் ரீ-மேக்கான இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. ஆனால் இந்த படத்திற்கான கதாநாயகி மட்டும் முடிவாகாமல் இருந்தது.
படப்பிடிப்புக்கு இடையில் கதாநாயகி தேர்வு நடந்து வந்தது. இந்நிலையில் 'வர்மா' படத்தின் கதாநாயகியாக மும்பையை சேர்ந்த மேகா சவுத்ரி என்பவரை தற்போது தேர்வு செய்துள்ளார் பாலா.
கோல்கட்டாவை பூர்வீகமாக கொண்ட மேகா சவுத்ரி, ஹிந்தியில் சில படங்களில் தலைகாட்டியவராம். 'வர்மா' படத்தில் மேகா சவுத்ரி நடிப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.