ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா. ராஜதந்திரம், ஜில்லா, கீ, உள்குத்து, கதாநாயகன், ரிச்சி, கணிதன், டார்லிங், வான் உள்ளிட்ட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.
விஷால், ஜெயம் ரவி, அதர்வா, ஜிவி பிரகாஷ், நிக்கி கல்ராணி உள்ளிட்ட முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். விரைவில் சினிமாவில் நடிக்க இருக்கிறார் என்று பேசப்பட்ட ஜாய், திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவருக்கும் தொழிலதிபர் பிரடெரிக் என்பவருக்கும் காதல் இருந்துள்ளது. தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.
இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுஸில் நடைபெற்றது. நடிகர்கள் சிவகார்த்திகேயன், நகுல், 'கயல்' சந்திரன், நடிகைகள் சுஜா வருணீ, அதுல்யா ரவி, இயக்குநர் அட்லீ, பிரியா அட்லீ, எடிட்டர் ரூபன், பின்னணி பாடகி சைந்தவி, வி ஜே ரம்யா, அஞ்சனா உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.