ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சிரஞ்சீவி நடித்து வரும் வரலாற்று படம் சைரா நரசிம்ம ரெட்டி. ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கி வருகிறார். சிரஞ்சீவி மகன் ராம்சரண் தயாரிக்கிறார். சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா என பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை 2019ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிடுகிறார்கள். அதன்காரணமாக படப்பிடிப்பில் அவசரம் காட்டாமல் மெதுவாக நகர்த்தி வருகிறார்கள். முதல் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் முடிந்ததும் இறுதிகட்ட பணிகளும் நடந்தபடி கிராபிக்ஸ் வேலைகளும் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
இந்த படத்திற்காக நயன்தாரா அக்டோபர் மாதம் வரை கால்சீட் கொடுத்துள்ளார். ஆனால் இவர்கள் போகிற வேகத்தைப்பார்த்தால் அதன்பிறகும் ஒரு மாதம் இந்த படத்திற்காக நயன்தாரா காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாம். இதனால் புதிய படங்களுக்கு சரியானபடி கால்சீட் தேதியை ஒதுக்கிக் கொடுக்க முடியாமல் தடுமாற்றத்தில் உள்ளார் நயன்தாரா.