ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மலையாளத்தில் மும்பை எக்ஸ்பிரஸ், தமிழில் 'துருவங்கள் பதினாறு' போல சில வித்தியாசமான படைப்புகளுக்கு தனது நடிப்பால் உயிர்கூட்டியவர் நடிகர் ரகுமான். அப்படி ஒரு தோற்றம் உருவாகி விட்டதாலோ என்னவோ, தான் தேர்ந்தெடுக்கும் கதைகளிலும் கதாபாத்திரங்களிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் ரகுமான்.
அந்தவகையில் தற்போது பிருத்விராஜூடன் இணைந்து ரணம் என்கிற படத்தில் நடித்துள்ளார் ரகுமான். இதில் டெட்ராய்ட் நகரில் வசிக்கும் ஸ்ரீலங்கா கேங்ஸ்டர் ஆக நடித்திருக்கிறார் ரகுமான். இந்தப்படத்தின் இயக்குனர் நிர்மல் சகாதேவ் இவரது கேரக்டர் பற்றி முன்பே கூறியிருந்தாலும், ஆரம்ப நாட்களில் தனது கேரக்டர் பற்றிய சந்தேகத்துடனேயே தான் நடித்தாராம் ரகுமான். படம் முடியும்போது தான் அந்த கேரக்டரின் கனமும் வீரியமும் புரிந்தது என்கிறார் ரகுமான்.