மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
மலையாள சினிமாவை பொறுத்தவரை 'மேட் பார் ஈச் அதர்' என சொல்லப்படுகின்ற மிகச்சில ஜோடிகளில் பிருத்விராஜ்-மம்தா மோகன்தாஸ் ஜோடியும் ஒன்று.. அன்வர், செல்லுலாய்ட் ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் நைன் என்கிற படத்திற்காக இணைந்திருக்கிறது.. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப்படத்திற்கான மம்தாவின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளார் பிருத்விராஜ்.
பிருத்விராஜ் நடித்து விரைவில் வெளியாகவுள்ள ரணம் படத்தில் இதற்குமுன் நடிக்க ஒப்பந்தமான மம்தா, சில காரணங்களால் அதிலிருந்து விலகியது இங்கே குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, இந்த நைன் படத்தில் மம்தா தவிர நடிகை வாமிகாவும் இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார்.