ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில் நேற்று திருவனந்தபுரத்தில் மலையாள திரையுலகினர் நட்சத்திர கலைவிழா நடத்தினர். இந்த விழாவில் மோகன்லால் மம்முட்டி உள்ளிட்ட முன்னனின் நட்சத்திரங்களும் தங்களது பங்களிப்பை வெளிகாட்டினர். இதற்காக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மோகன்லால் மம்முட்டி அனைவரும் ரிகர்சலில் பங்கேற்றனர்.
அந்த ரிகர்சலின்போது மம்முட்டி நடனமாடி ஒத்திகை பார்த்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. 66 வயதான மம்முட்டி டான்ஸ் ஆடுவதை சோஷியல் மீடியாவில் பலரும் கிண்டலடித்தனர்.. ஆனால் மம்முட்டியை பொறுத்தவரை விழாக்குழுவினர் தனக்கு என்ன பொறுப்பு கொடுக்கிறார்களோ அதை வயதை காரணம் காட்டி தவிர்க்க விரும்பவில்லையாம்.
ஆனாலும் இப்படி மம்முட்டி கிண்டலடிக்கப்படுவதை விரும்பாத அவரது ரசிகர்கள் மோகன்லால் வயதிற்கும் உடம்பிற்கும் டான்ஸ் ஒத்துவரும்.. ஆனால் மம்முட்டிக்கு எதற்கு டான்ஸ் நிகழ்ச்சியை தருகிறீர்கள்.. நாடகம் காமெடி என வேறு நிகழ்ச்சிகளை அவருக்கு ஒதுக்கலாமே என தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.