ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல சண்டை இயக்குனரும், தென்னிந்திய தயாரிப்பாளர்கள் கில்டின் செயலாளருமான ஜாக்குவார் தங்கத்தின் மகன் விஜய ஜாக்குவார். சூர்யா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது இந்தியன் என்ற படத்தில் நடித்து வருகிறார். பல படங்களுக்கு சண்டை இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.
விஜய ஜாக்குவாருக்கும், வடபழனி ஆறுமுகம், கீதா தம்பதிகளின் மகள் நிவேதிதாவிற்கும் வடபழனி முருகன் கோவிலில் திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டார்கள்.
விழாவில் தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் ராஜ்கிரண், ராமராஜன், இயக்குனர்கள் சீனு ராமசாமி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்தவர்களை ஜாக்குவார் தங்கம், அவரது மனைவி சாந்தி ஜாக்குவார், இளைய மகன் ஜெய் ஜாக்குவார் ஆகியோர் வரவேற்றனர்.