ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் 'கயல்' சந்திரன், சாதனா டைட்டஸ் இணைந்து நடித்துள்ள படம் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்'. 'கயல்' சந்திரன், சாதனா டைட்டஸுடன் பார்த்திபன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம், கிரிக்கெட் விளையாட்டு பின்னணியில் உருவாக, இப்படத்திற்கு மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு செய்துள்ளார். அஷ்வத் இசை அமைத்துள்ளார்.
'2 MOVIE BUFF' மற்றும் 'ACROSS FILMS' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை 'லிப்ரா புரொக்ஷன்ஸ்' நிறுவனம் வாங்கியிருக்கிறது.
'சுட்டகதை', 'நளனும் நந்தினியும்' உட்பட சில படங்களை தயாரித்த பட நிறுவனம் இது. அந்த இரண்டு படங்களும் தோல்வியடைந்ததால் நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் ரவீந்தர், தற்போது மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.
நட்புன்னா என்ன தெரியுமா என்ற படத்தை தயாரித்து வரும் ரவீந்தர், மிஷ்கினை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார்.