ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடன அமைப்பாளராக இருந்த பிரபுதேவா சில ஆண்டுகளாக நடிகராக வலம் வந்தார். பின்னர் நடிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு இயக்குநராக வலம் வந்தார். பிறகு 7 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கிய, தேவி படத்தில் மீண்டும் ஹீரோ ஆனார். தற்போது அவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.
இந்த படங்களில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், நடித்துள்ள, மெர்குரி படத்தில் மோனோ ஆக்டிங் செய்துள்ளார் பிரபுதேவா. படத்தில் அவர் ஒரு வசனம் கூட பேசாமல் நடித்திருக்கிறார். ஏப்ரல் 13-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது. அந்த வகையில் சைலன்ட் திரில்லர் கதையில் இப்படம் தயாராகியிருக்கிறது.
இதுவரை இந்த மெர்குரி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு மட்டுமே எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இப்படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்பராஜ், ரஜினியின் புதிய படத்தை இயக்கப்போகிறார் என்கிற செய்திகள் வெளியானதில் இருந்து மெர்குரி படம் ரசிகர்களின் கவனத்துக்கு வந்து விட்டது. அதனால் இதுவரையில்லாத அளவுக்கு இந்த ஒரு படத்திற்காக கடின உழைப்பை கொட்டி நடித்துள்ள பிரபுதேவா, தனது நடிப்பு கண்டிப்பாக பெருவாரியான ரசிகர்களை போய் சேர்ந்து விடும் என்று உற்சாகத்துடன் காணப்படுகிறார்.