ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கும் படம் 'காலா'.
இப்படத்தின் டீசரை இன்று காலை 10 மணிக்கு வெளியிடுவதாகச் சொல்லிவிட்டு, இணையங்களில் லீக் ஆனதால் நள்ளிரவில் வெளியிட்டு விட்டார்கள். இருந்தாலும் ரஜினி படங்களுக்கு உரிய வரவேற்பும், விமர்சனமும் இந்த டீசருக்கும் எழுந்திருக்கிறது.
வழக்கம் போல, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கிளர்ந்து எழும் நாயகன் கதாபாத்திரமாகத்தான் 'காலா' கதாபாத்திரம் தெரிகிறது. கூடவே, ரவுடித்தனத்தையும் சேர்த்துள்ளார்கள். அதற்கு டீசரில் வரும் ஒரு சில வசனங்களே சாட்சி.
“காலான்னா கருப்பு, காலன் கரிகாலன், சண்டை போட்டு காக்கறவன்”,
“செட்டிங்கா, வேங்கையன் மவன் ஒத்தையில நிக்கன், தில்லிருந்தா மொத்தமா வாங்கல”,
“இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!!”, என பன்ச் வசனங்களை 1 நிமிடம் 18 வினாடிகளுக்குள்ளேய ரஜினி ரசிகர்களின் கைத்தட்டல்களுக்காகச் சேர்த்திருக்கிறார்கள்.
நானா படேகர் தான் படத்தின் வில்லன் எனத் தெரிகிறது. அரசியல்வாதியோ, மந்திரியோ அதிகார மையத்தில் இருக்கிறார். அவரை எதிர்த்துத் தன் மக்களுக்காக ரஜினிகாந்த் போராடுவதுதான் படத்தின் கதையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
கொஞ்சம் 'நாயகன்', கொஞ்சம் 'கபாலி' சாயல் படத்தில் இருக்கலாம். அதையும் மீறி 'காலா' தனியாகத் தெரிந்தால் அந்தப் பெருமை இயக்குனர் பா.ரஞ்சித்தையே சாரும்.
ரஜினியிடம் வழக்கம் போல அந்த 'பவர்' திரையில் தெறிக்கிறது. அவர் நிற்கும், நடக்கும், பேசும் ஸ்டைல்கள் அவருடைய ரசிகர்களுக்கு பேரானந்தத்தைத் தரும்.
சந்தோஷ் நாராயணன் அதே 'கபாலி' பார்முலாவில் இசையமைத்திருக்கிறார்.
வா உன்னையும் மண்ணையும் வென்றுவா
தீராத ஓர் தேவையை கொண்டுவா
நூறாயிரம் ஆண்டுகள் போதுமே
ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய்
கற்றவை பற்றவை !!
என ரஜினிகாந்தைப் பாராட்டுபவர்கள் ரஜினிகாந்தின் மனைவியான ஈஸ்வரி ராவ் பேசும் அந்த 'நெகட்டிவ்' வசனத்தை எதற்கு சேர்த்திருக்க வேண்டும். “அண்ணன்தானே, போடுவாரு...போடுவாரு...எத்தனை நாளுக்குன்னு நானும் பாக்கன்” என்கிறார்.
ஒரு பக்கம் ரசிகர்களால் 'காலா' டீசர் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் மீம்ஸ்களும் பறக்க ஆரம்பித்துவிட்டன. காலை முதலே 'காலா' மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.
அதே சமயம், இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி ஹீரோயிசம், ரவுடியிசம் என ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருப்பார். அமிதாப்பச்சன் போல வித விதமான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டாரா என்று ஒரு சாரார் கேள்வி எழுப்புகின்றனர்.
எப்படியோ 'மெர்சல்' படம் அளவிற்கு சாதனை படைக்கவில்லை என்றாலும் 'கபாலி' டீசரின் சாதனையை 'காலா' முறியடித்துவிடும் என்பது உண்மை.