ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் ராம்சரண்-சமந்தா நடித்துள்ள படம் ரங்கஸ்தலம். 1885ல் நடக்கும் கதையில் இந்த படம் தயாராகி வருகிறது. பக்கா கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக ராம்சரண்-சமந்தா இருவருமே தங்களை கிராமத்து கதாபாத்திரங்களாக முழுமையாக மாற்றிக்கொண்டு நடித்துள்ளனர்.
மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியிருக்கிறது. அதோடு, பிரகாஷ் ராஜ், ஜெகபதிபாபு, கெளதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். மார்ச் 30-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
இதுவரை ரொமான்டிக், ஆக்சன் காட்சிகளாக அதிகம் நடித்துள்ள ராம்சரண் தேஜா, இந்த படத்தில் காமெடி கலந்த வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, நானும் ரெளடிதான் படத்தில் காது கேளாத பெண்ணாக நயன்தாரா நடித்தது போன்று இந்த படத்தில் ராம் சரண் காது கேளாதவராக நடித்துள்ளார். அவரது காமெடி காட்சிகள் காமிக் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.