ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ். இவர் முஸ்லீம் மதத்தை தழுவினார். தற்போது இவரது வாழ்க்கை திரைப்படமாக தயாராகி வருகிறது. மலையாளத்தின் முதல் இயக்குனர் ஜே.சி.டேனியலின் வாழ்க்கை வரலாற்றை செல்லுலாயிட் என்ற பெயரில் இயக்கிய கமல், இதனை இயக்குகிறார். படத்திற்கு ஆமி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முதலில் கமலாதாஸ் கேரக்டரில் வித்யா பாலன் நடிப்பதாக இருந்தது. அவர் மறுத்துவிடவே மஞ்சுவாரியார் நடித்தார்.
தற்போது இந்தப் படத்திற்கு தடை கேட்டு கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரடப்பட்டுள்ளது. இதில் கமலாதாசின் வாழ்க்கை சம்பவங்கள் திரித்து காட்டப்பட இருப்பதாகவும். இதனால் அவரது புகழுக்கு களங்கம் ஏற்படும் என்றும் வழக்கு தொடர்பான மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஒருவரின் வாழ்க்கையை படமாக்கும்போது இதுபோன்ற இடையூறுகள் வருவது சகஜம்தான் அந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்" என்று இயக்குனர் கமல் அறிவித்துள்ளார்.