ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்திய நடிகர்களில் அமிதாப்பச்சன் குறிப்பிடத்தக்கவர். இன்றைக்கு முன்வரிசையில் இருக்கும் பல நடிகர்களுக்கு அவர்தான் ரோல்மாடல். அந்தவகையில், தெலுங்கு நடிகர் ரவிதேஜா, எனது பேவரிட் ஹீரோ எப்போதுமே அமிதாப்பச்சன்தான் என்று கூறியுள்ளார்.
நடிகர் ரவிதேஜா அவ்வப்போது டுவிட்டரில் தனது ரசிகர்களுடன் உரையாடுவார். அப்படி சமீபத்தில் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு டுவிட்டரில் பதிலளித்தபோது, அமிதாப்பச்சன் பற்றி கூறியிருக்கிறார். மேலும், நான் சிறிய வயதில் மும்பையில்தான் வளர்ந்தேன். அதனால் அப்போது அமிதாப்பச்சன் படங்களுக்கு பெரிய ரசிகராக இருந்தேன். அந்த வகையில், தனது படங்கள் மூலம் என்னை அமிதாப்ஜி நிறைய பாதித்துள்ளார். அதோடு எனது படங்களில் அவரை நான் நிறைய பின்பற்றியிருக்கிறேன் என்று கூறியுள்ளார் ரவிதேஜா.