ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல மலையாள இயக்குனர் கமல் டைரக்சனில் தற்போது ஹிந்தி மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள 'ஆமி' என்கிற படத்தில் நடித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர். கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் மாதவிக்குட்டியாக பிறந்து எழுத்தாளராக உருவெடுத்து, 67வது வயதில் இஸ்லாமிய மதத்திற்கு கமலா சுரையாவாக மாறிய பெண்மணியின் சுயசரிதையைத்தான் 'ஆமி' என்கிற பெயரில் படமாக இயக்கியுள்ளார் கமல்
இந்தநிலையில் இந்தப்படத்தில் மாதவிக்குட்டியின் நிஜ வாழ்க்கை சம்பவங்களை இயக்குனர் கமல் சினிமாவுக்காக திரித்து மாற்றிவிட்டதாகவும், இந்தப்படம் லவ் ஜிஹாத்திற்கு ஆதரவாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்தப்படத்தை திரையிட தடைவிதிக்க வேண்டும் என கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது..
“இந்தப்படம் வெளியாவதற்கு முன்பும் வெளியான பின்பும் நிறைய சர்ச்சைகள் வரும், ஆனால் அதை எதிர்நோக்க நான் தயாராக இருக்கிறேன்” என இயக்குனர் கமல் ஏற்கனவே கூறியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.