சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடிகர் தனுஷ், இந்தியில் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட்டின் இளம் நடிகை சோனம் கபூர் நடிக்க இருக்கிறார். கொலவெறி பாடல் மூலம் பிரபலமான நடிகர் தனுஷூக்கு இந்தி படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனந்த எல்.ராய் இயக்கும் இப்படத்திற்கு ராஞ்ஜா என்று பெயரிட்டுள்ளனர். காசியை பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷூக்கு ஏற்ற நாயகியை தேடி வந்தார் டைரக்டர்.
இந்நிலையில் நடிகர் அனில் கபூரின் மகளும், பாலிவுட்டின் இளம் நாயகியுமான சோனம் கபூர், தனுஷூக்கு ஜோடியாக்க நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய அப்பாவை போல, சோனமும் தென்னிந்திய படவுலகில் தொடர்பு வைத்து கொள்ள விரும்பவதால், அவர் இந்தபடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே ஏற்கனவே 2 இந்தி படங்களில் சோனம் கபூர் நடித்து வருவதால், தனுஷ் படத்துக்கு கால்ஷீட் தருவதில் பிரச்னை எழும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.