மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பிரேமம் நாயகி சாய் பல்லவி தெலுங்கில் பிடா, எம்சிஏ படங்களில் நடித்தவர், அதையடுத்து தமிழ், தெலுங்கில் தயாராகும் கரு படத்தில் நடித்திருப்பவர், இப்போது தனுசுடன் மாரி-2வில் நடிக்கிறார். இந்த படத்தில் நடித்து வரும்போதே தெலுங்கில் சர்வானந்துக்கு ஜோடியாக பாடி பாடி லேசே மனசு என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார்.
இந்த படமும் காதல் கதையில்தான் தயாராகிறது. ஆனால் இதுவரை நடித்ததில் இருந்து மாறுபட்ட ரொமான்டிக் கதையில் நடிப்பதாக கூறியுள்ள சாய் பல்லவி, இந்த படம் வெளியாகும்போது இளைஞர்கள் மத்தியில் எனக்கு இன்னும் ரொம்ப நல்ல பெயர் கிடைக்கும். அந்த அளவுக்கு ஆண்களும் போற்றக்கூடிய காதல் கதையில் நடிக்கிறேன் என்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெறுகிறது. அதனால் விரைவில் நேபாளம் செல்கிறார் சாய் பல்லவி.