ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறையாக விஸ்வாசம் படத்திலும் இணைவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஜனவரி 19-ந்தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கயிருப்பதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள், டெக்னீசியன்கள் பற்றிய தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இருப்பினும், மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக செய்திகள் வெளியாகின. பின்னர் அது உறுதிப்படுத்தப்படாத செய்தி என்று கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது அஜித்தின் வேதாளம், விவேகம் படங்களுக்கு இசையமைத்த அனிருத்தே விஸ்வாசம் படத்திற்கும் இசையமைக்கயிருப்பதாக தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.