ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சிரஞ்சீவி தற்போது நடித்து வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட வீரரின் கதையில் தயாராகி வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், அந்த படத்திற்காக வளர்த்திருந்த தாடியை திடீரென்று நீக்கி விட்டார் சிரஞ்சீவி. இதனால் படத்திற்கு ஏதோ சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும், படத்தின் டைரக்டர் மாற்றப்பட்டுள்ளார் என்றும் டோலிவுட்டில் வதந்திகள் சிறகடித்தன.
ஆனால், இந்த வதந்திகளை சிரஞ்சீவி படக்குழு மறுத்துள்ளது. சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி ஜனவரி இறுதியில் தொடங்கும் என்று அறிவித்துள்ளனர். அதோடு, படப்பிடிப்புக்கு அதிக இடைவெளியிருப்பதால் தனது தாடியை நீக்கிய சிரஞ்சீவி, மீண்டும் வளர்த்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.