ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியத் திரையுலகில் தமிழ்ப் படங்கள் டியுபில் செய்த சாதனையை பலப்பல கோடிகள் வசூலிக்கும் ஹிந்தித் திரையுலகமே இன்னும் தொட முடியாமல் இருக்கிறது. தெலுங்குத் திரையுலகத்தில் தற்போதுதான் போட்டிக்கு வர ஆரம்பித்துள்ளார்கள். இருந்தாலும், தமிழ்த் திரையுலகத்தை விட பெரிய திரையுலகமான தெலுங்குத் திரையுலகத்தில் யு டியூப் சாதனை என்பது இன்னும் வளர்ச்சி நிலையில்தான் உள்ளது.
இருந்தாலும் சமீபத்தில் வெளியான 'அஞ்ஞாதவாசி' படத்தின் டீசர் தெலுங்குத் திரையுலகத்தில் குறிப்பிடத்தக்க சாதனையைப் புரிந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த டீசர் தற்போது ஐந்து லட்சம் லைக்குகளைக் கடந்துள்ளது. மொத்த பார்வைகளின் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அப்படி ஒரு சாதனையைப் புரிந்த படத்தில் இசையமைப்பாளராக தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாவதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. இப்படத்தின் பாடல்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர்.
த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல், குஷ்பு மற்றும் பலர் நடித்துள்ள 'அஞ்ஞாதவாசி படம் பொங்கலை முன்னிட்டு வெளிவர உள்ளது. முந்தைய பவன் கல்யாண் பட சாதனைகளை முறியடித்து பெரும் வசூலை இந்தப் படம் குவிக்கும் என டோலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.